ஒட்டணியினை பின்வரும் வேறு பெயர்களாலும் அறிஞர்கள் அழைப்பர்
ஒட்டணியினை பின்வரும் வேறு பெயர்களாலும் அறிஞர்கள் அழைப்பர் ஒட்டணியினை பின்வரும் வேறு பெயர்களாலும் அறிஞர்கள் அழைப்பர்: பிறிது மொழிதல் (புறப்பொருள்) நுவலா நுவற்சி சுருங்கச் சொல்லல் தொகைமொழி உள்ளுறையுவமம் (அகப்பொருள்) உவமப் போலி தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமம் அல்லது உவமப் போலி என்பது அகப்பொருள் பாடல்களில் மட்டும் பயின்று வரும். தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கூறப்படும். மேலே ஒட்டு அணிக்குச் சான்றாகத் தண்டியலங்கார ஆசிரியர் காட்டிய வெறிகொள் இனச்சுரும்பு என்று தொடங்கும் பாடல், மருதத் திணைக்கு உரிய தாமரைமலர், காவிமலர் ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டிருப்பதைக் காணலாம். தொல்காப்பியர் குறிப்பிடும் உள்ளுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணரும் இப்பாடலையே காட்டியுள்ளார். அகப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியை 'உள்ளுறை உவமம்' என்றும், புறப்பொருளில் பயின்று வரும் ஒட்டு அணியைப் 'பிறிது மொழிதல் அணி' என்றும் இலக்கண விளக்கம் என்ற நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் வேறுபடுத்திக் கூறுகின்றார். வகைகள் ஒட்டணி நான்கு வகைகளென பின்வரும்